வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் கூட்டமைப்புக்குள் இழுபறி நிலை


டமாகாண சபைத்தேர்தலுக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்வது இழுபறியில் முடிந்தமையினால், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் நேற்றையக்கூட்டம் நிறைவடைந்தது. 

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன், செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன். ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது. பின்னர் வடமாகாண தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது.

 முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கவேண்டும் என்று இரா.சம்பந்தன் முன்மொழிந்ததுடன். அவரையே நியமிக்கவேண்டுமென ஆணித்தரமாக கூறிநின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளையில், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்று கோரிநின்றதுடன் தங்களுடைய கோரிக்கையை ஆதரித்து கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்தனர். 

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் சார்பில் யாரை நிறுத்துவது என்று ஏகமனதாக முடிவெடிக்கமுடியாமையினால் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றுவரை பிற்போடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :