வாலுடன் பிறந்த முஸ்லிம் சிறுவனிடம் உள்ளங்கைகளில் மறைக்கப்பட்ட உண்மை

முஸ்லிம் குடும்பத்தில், வாலுடன் பிறந்த குழந்தையை, அனுமனின் அவதாரம் என கருதி,பொதுமக்கள் வணங்கிச் செல்கின்றனர். 

பஞ்சாப் மாநிலம், பதேஹ்கர் மாவட்டத்தின், நபீபூர் என்ற ஊரில், 2001ம் ஆண்டில் பிறந்த அர்ஷத் அலிக்கு, பிறக்கும் போதே, இடுப்பின் பின்பகுதியில், வால் போன்ற அமைப்பு இருந்தது.

அர்ஷத்தின் தந்தை இறந்துவிட்டார்; தாய் சல்மா,33, மற்றொருவரை திருமணம் செய்துள்ளார். அர்ஷத்துக்கு வால் இருப்பதை அறிந்த அவனின் தாத்தா,இக்பால் குரேஷி, மருத்துவர்களை ஆலோசித்துள்ளார். வால் போன்று காணப்படும் அந்த உறுப்பை அகற்றினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும், என, டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால், அஷ்ரத்தின் வாலை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.

இப்போது 12 வயதாகும் அர்ஷத் அலியின் வாலும் நீளமாக வளர்ந்துள்ளது. அரசுப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் அர்ஷத்,சக மாணவர்களுடன் பழகவும்,விளையாடவும் முடியாமல், வருத்தத்துடன் உள்ளான். 

இந்நிலையில், அர்ஷத்துக்கு, வால் மட்டுமல்லாமல், மற்றுமொரு விடையமாக உள்ளங்கைகளில், தாமரை சின்னம் உள்ளிட்ட, ஒன்பது தெய்வீக குறிகள் உள்ளதை அறிந்த பொதுமக்கள்க், அவனை தெய்வமாக வழிபடத் துவங்கி விட்டனர். 

வால் முளைத்த அர்ஷத் குறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் படித்த, உள்ளூர் மற்றும் வெளியூர்வாசிகள்,ஆயிரக்கணக்கானோர், அச்சிறுவனிடம் ஆசிபெற்று செல்கின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :