மும்முனை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டினால் மயிரிழையில் வெற்றிபெற்றுள்ளது.
கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணிசார்பாக ரோஹித் ஷர்மா 60 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக கெமர் ரூச், ரினோ பெஸ்ட், டெரன் சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
230 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை எட்டியது.
மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோன்சன் சார்ள்ஸ் 97 ஓட்டங்களையும், டெரன் பிராவே 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணிசார்பாக உமேஸ் யாதேவ் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், இஷாந் ஷர்மா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் வீழ்த்தினார்.
போட்டியின் சிறப்பாட்டகாரராக மேற்கிந்திய தீவுகள் அணிவீரர் ஜோன்சன் சார்ள்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த தொடரில் தாம் பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment