மஹியங்கன பள்ளிவாசல் தாக்குதல் தாக்கப்பட்ட படங்கள் இணைப்பு.

ஏ எம் எம் முஸம்மில்- 
 ஹியங்கனை அரபா ஜும்மா பள்ளிக்குள் பன்றியருத்து எரிந்தும் . ஜன்னல் கதவுகளை உடைத்தும், இன வெறியர்களின் அட்டகாசம்.

நேற்று இரவு தராவிஹ் தொழுகைக்கு பின் சுமார் 11 :1௦ மணியளவில் குறிப்பிட்ட பள்ளிவாயல் அமைந்துள்ள பகுதிக்கு மட்டும் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது, சற்றுநேரத்தில் முக மூடியணிந்த ஆறு பேர் மூன்று மோட்டார் வண்டிகளில் , கையில் வாலி ஒன்றையும் உரைய ஒன்றையும் ஏந்தி பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.

 இப்பள்ளிவாசல் நிறுவனரும் வர்த்தகருமான அல்ஹாஜ் சீனி முஹம்மது அவர்கள் வாசல் முன்றலில் நின்றுகொண்டிருந்துள்ளார். அவரது முகத்தில் மிளகாய் தூளை எறிந்தவர்கள், முன்பள்ளியின் கதவை பலமாக தட்டி திறக்க முயற்சி செய்துள்ளனர் , பின்பு ஜன்னல் கதவுகளை உடைத்து பள்ளியினுள் புகுந்துள்ளனர்.

 பள்ளிவாயிலினுள் பன்றியின் தலை , குடல், ஈரல், இரத்தம், கால்கள் போன்ற உறுப்புகளை , பரந்தளவில் வீசியுள்ளனர், இது விடயமாக ஊவா மாகாண காணி அமைச்சர் அனுரா விதான கமகே அவர்களுக்கு தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 நிகழ்வு நடந்து சுமார் பதினைந்து நிமிடங்களுக்குள் அவ்விடத்துக்கு வந்துள்ள அனுரா விதான கமகே மற்றும் மஹியங்கனை போலிஸ் உத்தியோகத்தர்களும் வருகைதந்துள்ளனர், உடனடியாக பள்ளியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற போலிஸ் மேலதிகாரியினதும் , மாகாண அமைச்சர் அனுரா விதானகமகேயினதும் ஆலோசனைக்கு இணங்க போலிஸ் உத்தியோகத்தர்களால் பள்ளிவாசல் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இப்பள்ளிவாசல், மஹியங்கனை ரண்முத்து கோல்ட் ஹவ்ஸ் வியாபார ஸ்தானத்திற்கு சொந்தமான காணியில் பிரத்தியேகமாக 1991ம ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது.காத்தான் குடியை சேர்ந்த அல்ஹாஜ் சீனி முஹம்மது அவர்களின் நன்

கொடையால் உருவாகிய இப்பள்ளிவாசலுக்கு கடந்த காலம் நெடுகிலும் ஜும்மா தொழுகையை நிறுத்தும் படியும் பள்ளிவாசலை அகற்றிவிடும் பல அச்சுறுத்தல்கள் விடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும் . இன்றைய ஜும்மாதொளுகைக்கு அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கும் வேளையில் தற்போது போலிஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் ,

இப்பள்ளிவாயலின் நிறுவுனர் அல் ஹாஜ் சீனி முஹம்மது அவர்கள் சுமார் 44 வருடங்களுக்கு முன் காத்தான்குடி பிரதேசத்திலிருந்து வியாபாரநோக்கில் மஹியங்கனை பிரதேசத்திற்கு வந்தவர் ஆவார்.

 இப்பள்ளிவாயல் நிர்வாக சபைத்தலைவர் ,சுலைமான் அப்துல் ஹமீது (மலிபன் கார்மெண்ட்ஸ்) அவருடன் இணைந்து அல்ஹாஜ் சீனி முஹம்மது மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் தற்போதைய நிலவரங்களை கையாள்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :