திருப்பூர் மாவட்டம், உடுமலை யு.எஸ்.எஸ் காலனியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கணேசன் (40). இவர் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் கண்பார்வையும், காது கேட்கும் திறனையும் இழந்துவிட்டார்.
இந்த நிலையில், கணேசனை அவரது தாயார் வேலம்மாள், தம்பி மாரிமுத்து ஆகியோர் பராமரித்து வந்தனர். கடந்த, ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் வந்த இவரது தம்பி மாரிமுத்து தூங்கிக் கொண்டிருந்த கணேசனின் தலையில் கல்லை போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலை நசுங்கி பலத்த காயம் அடைந்த கணேசன்,அங்கேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், உடுமலை போலிஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் சம்பவ இடத்துக்கு சென்று திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். இதில் தம்பி மாரிமுத்து அண்ணன் கணேசனை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மாரிமுத்து கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் கூறியது: கண்பார்வை பறிபோன நிலையில் காது கேட்கும் திறனையும் இழந்த கணேசனை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணன் தம்பி இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, கணேசனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது என்றனர்.

0 comments :
Post a Comment