இலங்கையின் சட்டம் காட்டுச் சட்டமாக உருவாகியுள்ளமை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மற்றும் அமைச்சர் ஜனக்கவின் மகன் மீதான தாக்குதல்களில் இருந்து வெளிப்படையாக புலனாவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா நாட்டின் பிரதான நகரில் நேற்று பகல் தாக்கப்பட்டமையை பார்க்கும்போது சாதாரண பொதுமக்கள் மீது மேற்கெள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கதைப்பாரற்ற நிலையுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (30) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதேவேளை பண பற்றாக்குறை காரணமாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி பெரும் பண பிரச்சினைக்கு உட்பட்டுள்ளன.
அரசு பல்வேறு தேவைகளுக்காக அவ் வங்கிகளில் கடன் பெறுவதனால் வங்கிகள் செயலிழந்து விடக்கூடிய தள்ளப்பட்டுள்ளன.
மக்களுக்கு பெரும் சேவையாற்ற வேண்டிய அமைச்சர் மைத்திரிபாலவின் சுகாதார அமைச்சிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 5000 மில்லியனில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
எனினும் தயட்ட கிருள்ள கண்காட்சிக்காக ஒதுக்கிய பணத்தில் ஒரு சதமேனும் குறையவில்லை என குறிப்பிட்டார்.
சீனாவிடம் கடன் பெற்று நாட்டு பிரச்சினைகளை தீர்க்காது தமது சொத்துக்களை சேர்ப்பதும் உகண்டாவுக்கு கொடுப்பதுமாக உள்ளதாகவும் தற்போது இலங்கையிலுள்ள பிரஜை ஒருவர் 3 லட்சத்துக்கும் அதிகமான கடனாளியாகவுள்ளதாக அத்தநாயக்க சுட்டிக் காட்டினார்.

0 comments :
Post a Comment