பள்ளி மாணவிகள் ஸ்கர்ட் அணிய தடை

ங்கிலாந்து நாட்டில் சமீப காலத்தில் 63 உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் ஸ்கர்ட் அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பள்ளி ஒன்றும் பின்பற்றத் துவங்கியுள்ளது.

ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் வாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பள்ளி, வரும் செப்டம்பர் முதல் தங்கள் பள்ளி மாணவிகளுக்கு முழு பேன்ட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இதுமட்டுமின்றி, வரும் 2014-ம் ஆண்டு முதல் இருபாலருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவர உள்ளது.

மாணவிகள் மிகவும் உயரம் குறைவான ஸ்கர்ட்டுகளை அணிந்துவருவதால் கீழே அமர நேரிடும்போது மிகவும் கண்ணியக்குறைவாக உள்ளது என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் டவுட்பயர் தெரிவித்துள்ளார். தாங்கள் நீளமான ஸ்கர்ட்டினை அணிந்து வரவேண்டும் என்று மாணவிகளை வற்புறுத்தும்போதும், அவர்கள் தாங்கள் பார்க்காத சமயங்களில் தங்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலை பிரச்சினைக்கு உள்ளதாக மாறுவதால் சீருடையை எளிமைப்படுத்தும் விதத்தில் மாற்றி அமைப்பதாக அவர் கூறினார்.

மேலும், இந்த மாற்றம் குறித்து ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெறும் என்றார். பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவு வேடிக்கையானது என்று விமர்சித்துள்ள சில பெற்றோர்கள், இதனால் மாணவிகளுக்கு குழப்பம் ஏற்படக்கூடும் என்று கருதுகின்றனர்.20-க்கும் மேற்பட்ட பெற்றோகள் கடிதம் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் இந்தத் தடை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :