2015 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் அட்டவணை அறிவிப்பு

11-வது உலக கிண்ண ஒருநாள் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அனுமதியுடன் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்துகிறது.

இந்த போட்டி 2015-ம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது.

14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக் மற்றும் நாக்-அவுட் ஆட்டங்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான எண்ணிக்கையில் நடைபெறும்.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் இடம் பெறும் பிரிவுகள், அணிகள் மோதல் அட்டவணை, ஆட்டங்கள் நடைபெறும் இடம் ஆகியவை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்து இருக்கின்றன.

போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நேரத்தில் மெல்போர்ன் (அவுஸ்திரேலியா), வெலிங்டன் (நியூசிலாந்து) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அட்டவணை வெளியாகிறது. அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆஸ்திரேலியா,நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மெல்போர்னில் நடைபெறும் அட்டவணை அறிவிப்பு நிகழ்ச்சியில் ஐ.சி.சி. துணைத்தலைவர் முஸ்தபா கமால், தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன், உள்ளூர் போட்டி அமைப்பு குழு சேர்மன் ரால்ப் வாட்டர்ஸ், தலைமை செயல் அதிகாரி ஜான் ஹார்டென் ஆகியோரும், வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஐ.சி.சி.தலைவர் ஆலன் ஐசக்,நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் தெரஸ் வால்ஷ் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :