அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 2013, 2014 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு


(கொழும்பிலிருந்து எஸ்.அஷ்ரப்கான்)

கில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 63 வது வருடாந்த பொதுக் கூட்டத்தின் பின்னர்2013, 2014 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு உறுப்பினர்களின் முதலாவது நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று (30) அமைப்பின் தேசியத்தலைவர் கே.என். டீன் தலைமையில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் அகில இலங்கை ரீதியாக அங்கத்துவ வை.எம்.எம்.ஏ கிளைகளின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான செயற்திட்டங்கள் பற்றியும், அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் அபிவிருத்தி மற்றும் ஏனைய புதிய திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு விசேடமாக பேரவையின் போசகரான பத்ரி ஹாஸீம் தேசிய பொதுச் செயரலாளர் ராஸ்மரா ஆப்தீன், தேசிய பொதுப்பொருளாளர் எம்.என்.எம். நபீல் ஆகியோருடன், முன்னைநாள் தலைவர்கள், நிர்வாகக்குழுவிலுள்ள அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :