சவூதி அரேபியாவில் விசா இல்லாமல் இருப்போருக்கு வீசா வழங்கப்படும்-KSA


வூதி அரேபியாவில் விசா அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சவூதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதிவரை விசா பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வீசா அனுமதியின்றி சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தொடர்ந்து 13 ஆயிரம் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சவூதியிலுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதுவராலயத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியிலுள்ள இலங்கை பிரஜைகளின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

சவூதி அரேபியாவில் ஆறு லட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :