சிலாவத்துறை நகரம், திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்.


(முசலியூர்.கே.சி.எம.அஸ்ஹர்)

முத்துச்சிலாபம் எனும் சிறப்புப்பெயரைக் கொண்ட சிலாவத்துறை நகரம் புராதன காலத்தில் முத்துக்குளித்தல்,யானை பிடித்தல்,வாசனைப்பொருட்கள் ,ஏற்றுமதி செய்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுடன் பின்ன்pப்பிணைந்ததாகக் காணப்பட்டது.

கீழக்கரை,கேரளா,தமிழ்நாடு;,மலபார்,எகிப்து,எமன்,மொரோக்கோ,சவூதி அரேபியா,பாரசீகம் போன்ற பிரதேசங்களிலிருந்தெல்லாம் வியாபாரிகள் சிலாவத்துறைக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

மொரோக்கோ யாத்திரிகர் இபுனு பதூதாவும் சிலாவத்துறைப்பிரதேசத்திற்கு வருகை தந்து சென்றுள்ளார்.இப்பிரதேசத்தில் இடம்பெற்ற முத்துக்குளித்தலைக் கண்காணிக்கும் செயற்பாட்டை ஐரோப்பியர் அல்லிராணி கோட்டைப்பகுதியில் இருந்து செய்துள்ளனர்.

இவ்வாறாக வரலாற்றுரீதியாக சிறப்புக்களைப் பெற்றிருந்த சிலாவத்துறை நகரம் 1988,89.90 காலப்பகுதியில் வடபகுதிக்குப்பொருட்களை வழங்கும் பிரதேசமாகச் செயற்பட்டு வந்தது.புத்தளம் கற்பிட்டியில் இருந்து கடல்மார்க்கமாக பொருட்கள் கொண்டுவரப்பட்டமை முக்கியத்துவமிக்கது.

1990 வடபுலமுஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்பு சிலாவத்துறை வர்த்தக நகரம் செயலிழந்துவிட்டது.சிலாவத்துறை முருங்கன் வீதி,அரிப்பு வீதி,புத்தளம் வீதி,கடற்கரை வீதி,பாடசாலை வீதி என 05 வீதிகளிலும் வர்த்தகநிலையங்கள் சிறப்பாக இயங்கிய அக்காலப் பசிய நினைவுகளை மறக்கமுடியாது.

2004 ல் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தி;ன் பின்பு சிலாவத்துறை நகரம் மெல்ல மெல்ல எழுந்து வருகின்றது.தற்போது இந்நகரைப்பார்க்கும் போது அதற்குரிய அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை.இந்நகரை சிறப்பாக மீளவும் உருவாக்க வேண்டும் என்றால் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

1.சிலாவத்துறை நகரத்திட்டமிடல்(மாஸ்டர் ப்ளேன்)ஒன்று உருவாக்கப்படவேண்டும்.

2.அரச பேருந்து நிலையம்,தனியார் பேரூந்து நிலையம் என்பன தனித்தனியாக உருவாக்கப்படவேண்டும்.

3.சுப்பர் மார்கட் அமைக்கப்படவேண்டும்.

4.மரக்கறிச் சந்தைகள்,மீன் விற்பனைச் சந்தைகள் என்பன உருவாக்கப்படவேண்டும்.

5மணிக்கூட்டுக் கோபுரங்களுடன் இணைந்த சுற்றுவட்டாரங்கள் அமைக்கப்பட வேண்டும்.

6பொருத்தமான இடங்களில் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டு உரிய நீர் வசதிகள் வழங்கப்படவேண்டும்.

7.நூலக வசதி நகரில் செய்யப்பட வேண்டும்.

8.வர்த்தக வங்கிகள் உருவாக்கப்படவேண்டும்.

9;.நகரின் பொருத்தமான இடங்களில் பின்வரும் அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நீதிமன்றம்,தபாலகம்,மீன்பிடிக்கூட்டுத்தாபனம்,நிலவளவைத் திணைக்களம்,உபமின் நிலையம்,கோப்சிட்டிகள்,கூட்டுறவுச்சங்கம்,நீர்வழங்கல் அதிகாரசபை,தகவல் தொழினுட்ப நிலையங்கள்.சமுர்த்தி வங்கிகள்,வனவிலாக்கா.பலகைக்கூட்டுத்தாபனம்.

10.சிலாவத்துறை நகரில் திட்டமிட்ட அடிப்படையில் நிழல் மரங்கள் நடப்பட வேண்டும்.உ..ம்.காயா மகாகோணிp (உயர்தர மரம்)இம் மரங்கள் வீதியோரங்களில் நடப்பபடுவதன்மூலம் பிரதேச வெப்பத்தாக்கத்தைக் குறைக்கலாம்.

11.பிரதேசத் திண்மக் கழிவுச் செயற்றிட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.அதனுடன் இயற்கைப்பசளைகளும் தயாரிக்கப்படலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :