வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 6-வது லீக் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

 இதில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

 இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கெயில் மற்றும் ஜார்லஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜார்லஸ் 60 ஓட்டங்களிலும், கெயில் 21 ஓட்டங்களிலும் அவுட் ஆனார்கள்.

ஜடெஜாவின் சிறப்பான பந்து வீச்சால், நடுவரிசை வீரர்கள் நிலைத்து விளையாடத் தவறினர். இதனால் அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டது. கடைசியில் சமி அதிரடியாக விளையாட, வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 9விக்கெட்டுகளை இழந்து 233 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடெஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து234 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி இந்தியா விளையாடியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சிகார் தவான் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். சர்மா 52 ஓட்டங்களிலும், கோலி 22 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். தவான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

இடையில் மழையால் ஆட்டம் பாதிப்படைந்து, பின்னர் மீண்டும் தொடங்கியது.கார்த்திக் மற்றும் தவான் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.தவான் 102 ஓட்டங்கள், கார்த்திக் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய ஜடெஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :