உயிருக்காகப் போராடிய மீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டு.


டந்தவாரம் வீசிய கடும்காற்றினால் கடலில் சிக்கி உயிருக்காகப் போராடிய மீனவர்களை தம் உயிரையும் துச்சமாக மதித்து கடல்நடுவே சென்று மீனவர்களை காப்பாற்றிய பேருவளை, மருதானை பகுதி முஸ்லிம்களுக்கு அப்பிரதேச சிங்கள மக்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டமொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துவருகின்றனர்.

கடந்த 08ஆம் திகதி வீசிய கடும் காற்றினால் பேருவளை பிரதேசங்களில் 20க்கும் மேற்பட்ட வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்றோர் நடுக்கடலில் சிக்கி உயிருக்காகப் போராடினார்கள். இவர்களில் பலரை மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் நீந்திச்சென்று காப்பாற்றியுள்ளனர்.

இவர்களது இந்த முயற்சியால் பல மீனவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருதானை, பண்டாரவத்தை கூட்டுறவு சங்கத் தலைவர் சுனில் ரம்யசிறி தெரிவித்தார்.முஸ்லிம் இளைஞர்களே எங்களது மீனவர்களை காப்பாற்றினார்கள். இது மறக்கமுடியாக ஒரு நிகழ்வு

. உயிரிழந்தவர்களின் மரணச் சடங்குகள் முடிவுற்ற பின்னர் இவர்களைப் பாராட்டி ஒரு விழா நடத்தவுள்ளதாக ரம்யசிறி மேலும் தெரிவித்தார்.NM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :