அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருப்பதனால் அவ்வாறான எழுச்சிகள் உருவாகுவதற்கான சந்தர்ப்பம்மிக மிக குறைவாகும் என்றாலும் இந்த வகையான அச்சுறத்தலை கண்காணிக்க வேண்டிய தேவையுள்ளது என்றும் அவர் சுட்டிக்கட்டினார்.
பேஸ்புக் டூவிட்டர் போன்ற புதிய சமூக ஊடகங்களின் ஊடாக நாடுகளை குழப்புவதற்கான ஆற்றல்களை கொண்டிருக்கின்றன என்பதனை டியூனீஷியா, லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் கண்டிருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி பாடநெறிகளுக்கான ஆரம்ப விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அதிகமான ஆட்கள் தேவையில்லை. எனவே இவர்களை பாரம்பரிய தேசிய பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்த முடியாது.
எனவே புலனாய்வு அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்ட கட்டளை அமைப்பின் கீழ் வேலை செய்வது அவசியம். சீனா, ரஷ்யா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளுடன் தற்போதுள்ள நல்லுறவை மேலும் பலப்படுத்திக் கொள்வது அவசியம்.
வீட்டோ அதிகாரமுள்ள இந்த நாடுகள் இலங்கை மீதான சர்வதேச நடவடிக்கைகள் மீது செல்வாக்கு செலுத்தவல்லன என்றும் அவர் கூறினார்.VV
0 comments :
Post a Comment