முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்காத அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் -இம்ரான் மஹ்ரூப்


முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் பல்வேறு அநீதிகள் இடம் பெற்று வருகின்றன. எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் இன்னும் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது வியப்பைத் தருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அவ்வூடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. அவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தனிக்கட்சி அவசியம் என்ற கோசத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் தன் பணியை சரியாகச் செய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி தேசியக் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன உருவாகின.

இன்று இவை அனைத்தும் அரசாங்கத்தின் பங்குதாரர்களாக உள்ளன. எனினும் இவர்களின் கண்முன்னாலேயே முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. 'உரிமைகள் மீறப்படுமாயின் அதற்கெதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறு' இஸ்லாம் மிகவும் வன்மையாக வலியுறுத்தியுள்ளது. அப்படியிருந்தும் ஏன் இவர்கள் அரசாங்கத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.?

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தான் சிறுபான்மையிருக்கு ஓரளவாவது அதிகாரப் பகிர்வை தந்துள்ளது. இன்று அதனை செயலிழக்க வைக்கும் கைங்கரியங்கள் அரங்கேறுகின்றன. இதன் மூலம் அமைச்சர்களான ஹக்கீம், அதாவுல்லா, றிசாத் பதியுதீன் ஆகியோர் தங்களது அரசியல் குருவாகக் கருதும் மறைந்த தலைவர் அஸ்ரபினது முஸ்லிம் மாகாணக் கனவுக்கு சாவு மணி அடிக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிஸ் ஆதரவாளர்களை இடமாற்றுமாறு பகிரங்கமாக கூறப்படுகின்றது. அதனடிப்படையில் இடமாற்றங்களும் நடக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யின் பெயர் இருக்கின்றது என்ற காரணத்துக்காக ஒரு திறப்பு விழாவில் செய்து வந்த பெயர்க் கல்லையே வைக்காமல் விட்டர்கள். அந்த எம்.பி.யால் உருவாக்கப்பட்ட பாடசாலையொன்றுக்கு கட்டட நிர்மாணத்துக்காக கோரிய கேள்விப் பத்திரம் இடை நிறுத்தப்பட்டது.

கிண்ணியா 96 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட பிரதேசம். அமைச்சர் றிசாத் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்தவர் தான் கிண்ணியா நகர சபைத் தவிசாளர். அவரால் ஆரம்பிக்கப்பட்ட வரவேற்புத்தூண் இஸ்லாமியக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறது என்ற ஒரே காணத்துக்காக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பள்ளிவாயல்களை நோக்கி பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கிண்ணியா நடுஊற்றுப் பகுதியில் பள்ளிவாயல் நிர்மாணம் ஒன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு நடந்தும் இந்த அமைச்சர்கள் இவை குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?

இந்த முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இன்னும் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக எதனைச் சாதிக்கப் போகின்றார்கள்? எனவே, முஸ்லிம் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் அமைச்சர் ஹக்கீம், அதாவுல்லா, றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு முஸ்லிம் மக்கள் மீது உண்மையான அன்பு இருக்குமாயின் தங்களது எதிர்ப்பைக் காட்டுவதற்காக உடனடியாக இந்த அரசாங்கத்திலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :