(எம்.பைஷல் இஸ்மாயில்)
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் மற்றுமொரு இணையத்தளம் நேற்று முன்தினம் 2013.06.12 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட முதல் தினமே தமிழ் எழுத்துக்களில் பிழை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றன.
இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த இணையத்தளத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். ஆரம்பித்த முதல் தினத்தில் ஏற்பட்டுள்ள இந்த எழுத்துப் பிழையானது இணையதளத்தின் முகப்பிலே இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றன.
அதில் இடம்பெற்றுள்ள எழுத்துப் பிழையானது, திணைக்களம் - என்பதற்குப் பதிலாக திணகைகளம் எனவும் தமிழ் - என்பதற்குப் பதிலாக நமிழ்' என இடம்பெற்றுள்ளன. இந்த இணையத்தள ஆரம்ப நிகழ்விலே ஏற்பட்டுள்ள தமிழ் எழுத்து கொலையானது எதிர்காலத்தில் எங்குபோய் முடியப்போகுதோ தெரியாது. பொருத்திருந்துதான் பார்ப்போம்.

0 comments :
Post a Comment