ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ள அருணிமா சின்கா என்ற பெண்.


டந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி உத்திர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார் தேசிய அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற அருணிமா சின்கா(வயது 25).

அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி பணம், நகையைப் பறித்தனர்.

இதைப் பார்த்த அருணிமா கொள்ளையர்களை விரட்ட தொடங்கினார். எனினும் கொள்ளையர்கள் அதிகம் பேர் இருந்த காரணத்தினால் அவரால் விரட்ட முடியவில்லை.

இந்நிலையில் அருணிமாவை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினர்.

அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது ரயில் ஏறியது.

இறந்தே விட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் வலது காலை மட்டும் இழந்தார்.

ஓராண்டு சிகிச்சை பெற்ற அந்த பெண் காலை இழந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை.
கொஞ்சமாக தொங்கிக் கொண்டிருந்த வலது காலில் செயற்கை காலை பொருத்தி இமயமலை மீது ஏறும் பயிற்சி பெற்றார்.

அதில் அவர் தேர்ச்சி பெறவே கடந்த ஏப்ரலில் “உலகின் மிகப் பெரிய சிகரம்” எவரெஸ்ட் மீது ஏறி சாதனை படைத்தார்.

இதன் மூலம் ஒரு காலை இழந்த எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை அருணிமா பெற்றார்.

அதற்குப் பிறகு உலகப் புகழ் பெற்ற அருணிமாவுக்கு பணம், புகழ் குவிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கிடைத்த பணத்தைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி பள்ளி தொடங்க உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :