ரஷ்யாவில் பொது இடங்களில் புகைப்பதற்கு தடை விதிக்கும் சட்டம் இன்று முதல்.

ஷ்யாவில் பொது இடங்களில் புகைப்பதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும். அந்த இடத்திலிருந்து 15 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளிலும் புகைத்தலுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஆயுட்காலத்தை அதிகரித்து பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ரஷ்யாவில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

உலகில் அதிகளவில் புகைப்பவர்கள் உள்ள நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய சனத்தொகையில் சுமார் 40 வீதமானவர்கள் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டம் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு விடயம் அல்ல எனவும் அதனை அமுல்படுத்துவதன் மூலமே எதிர்பார்த்த பலனை பெறமுடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :