அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய இணையத்தளம் நாளை திறந்து வைக்கப்படும்

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய இணையத்தள
ம் ஒன்று நாளை 12 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்படுமென அறியக்கிடைத்துள்ளன.

மக்கள் தொடர்பாடல் தகவல் துறை அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த புதிய இணையத் தளத்தையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சகல பிரிவுகள் குறித்தும் அவற்றின் நடவடிக்கைகள் குறித்தும் முழு விபரங்களையும் இந்த புதிய இணையத் தளத்தினூடாக அறிந்து கொள்ள முடியும்.

உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதெப்படி? அமைச்சரவை முடிவுகளை தெரிந்து கொள்வதெப்படி? மற்றும் திணைக்களத்தின் அரச திரைப்பட பிரிவின் கடமைகள், வெளியீட்டுப் பணியகம் மற்றும் ஊடக நூலகம் போன்ற அனைத்து பிரிவுகள் குறித்த சகல தகவல்களையும் உத்தேச புதிய இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :