தென் ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.


.சி.சி.சாம்பியன்ஸ்கோப்பைக்கான நேற்றைய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையே பிரிட்டன் பிர்மிங்காமில் நடைபெற்றது. டாசில் வெற்றிபெற்று முதலில் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக இங்ராம் மற்றும் ஆம்லா ஆகிய வீரர்கள் களமிறங்கினர்.

இதில் ஆம்லா மிகச்சிறப்பாக விளையாடி 81 ஓட்டங்கள் சேர்த்தார். பின்னர் ஆம்லா பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் வீசிய பந்துக்கு முகமது ஹபீசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அதனையடுத்து விளையாடிய டீ வில்லியர்ஸ் 31 ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்நிலையில் 50 ஓவர்களில்9விக்கெட்டுகள் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா 234 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 235 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தானின் இம்ரான் பர்ஹத் மற்றும் நசீர் ஜம்ஷெத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் பர்ஹத், அறிமுக வீரரான மோரிஸ் வீசிய பந்துக்கு 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் நசீரும், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் முறையே 42, 55 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். மற்றவர்கள் யாரும் சிறப்பாக விளையாடாததால் சொற்ப ஓட்டங்களிலேயே அவுட் ஆகினர். இதனால் 45 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 சொற்ப ரன்களிலேயே பாகிஸ்தான் சுருண்டது.

இதனால் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்காவின் எச்.எம். ஆம்லா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார். இந்த வெற்றியின் மூலம்னின்இரு புள்ளிகள் பெற்றுள்ளது. நடைபெற்ற இரு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் பாகிஸ்தானுக்கு ஒரு புள்ளி கூட கிடைக்கவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :