பொதுபல சேனா அத்தேஞான தேரரை கேள்வி கேட்ட ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்.



டந்த திங்கட்கிழமை தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “360″ கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் டில்கா சமன்மலீ அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அவர்கள் பங்குபற்றிய இந்நிகழ்ச்சியில் ஞானசார தேரரை சங்கடத்திற்கு உள்ளாகும் வகையில் தெரண ஊடகவியலாளர் டில்கா கேள்விகளை கேட்டதற்காக, அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞானசார தேரர், சிங்கள பௌத்தர்கள் குறித்தும், சூது மற்றும் மதுபானம் குறித்தும் கருத்து வெளியிடும் போது, தில்கா, இடைநிறுத்தி, தேரர் மதுபானத்தை அருந்தி விட்டு, வாகனம் ஓட்டிய சம்பவம் தொடர்பாக வழக்கொன்று இருப்பது பற்றிய கேள்வியை கேட்டுள்ளார். 

ஞானசார தேரர் மதுபானம் அருந்தி விட்டு, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியமை தொடர்பாக தில்கா கடுமையான கேள்விகளை கேட்டிருந்தார்.

எவ்வாறாயினும் தெரண தொலைக்காட்சியின் உரிமையாளர் திலித் ஜயவீர, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :