இலங்கைக்கு ஹஜ் கோட்டாவை சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு 2240ஆகக் குறைத்துள்ளது.


ற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த 2800 ஹஜ் கோட்டாவை சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு 2240ஆகக் குறைத்துள்ளது. சவூதி ஹஜ் அமைச்சர் பந்தர் பின் மொஹமட் ஹஜ்ஜாரினால் ஹஜ் குழுவின் இணைத்தலைவர் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸிக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பிட்ட அறிவித்தல் அடங்கிய கடிதம் நேற்று முன்தினம் அமைச்சர் பெளஸியிடம் சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதுவரினால் கையளிக்கப்பட்டது.

மக்காவில் பெரிய பள்ளிவாசல் அபிவிருத்தித் திட்ட பணிகள் பாரிய அளவில் பல பில்லியன் டொலர் செலவில் இடம்பெற்று வருவதால் கூடுதலான ஹஜ் பயணிகளை அனுமதிப்பதில் நிலவும் கஷ்டங்களையும் பயணிகளின் பாதுகாப்பான உறுதிப்படுத்துவதற்குமாகவே இவ்வருட ஹஜ் கோட்டாவைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சர் பெளஸிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபிய ஹஜ் அமைச்சர் கடந்த 10.3.2013ஆம் திகதி அனுப்பி வைத்த கடிதத்தில் இலங்கைக்கான இவ்வருட கோட்டா 2800 என உறுதிப்படுத்தியிருந்த நிலையிலே கோட்டா குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் ஹஜ் குழுவின் இணைத் தலைவரான சிரேஷ்ட அமைச்சர் பெளஸி இவ்வருடத்துக்கு இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை 5000ஆக அதிகரித்து வழங்கும் படி சவூதி இளவரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்காவில் நடைபெறும் பாரிய அளவிலான அபிவிருத்திப் பணிகளுக்காக ஹஜ்ஜாஜிகள் தங்கும் நூற்றுக் கணக்கான தங்குமிடங்களும், ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளும் அகற்றப்பட்டுள்ளமையினால் ஹஜ்ஜாஜிகளைத் தங்க வைப்பதிலும் சவூதி அரேபியா சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாலேயே இந்தக் கோட்டா குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அபிவிருத்திப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதும் எதிர்வரும் வருடங்களில் ஹஜ் கோட்டாவை அதிகரித்து வழங்குவதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அமைச்சர் பெளஸியிடம் உறுதி வழங்கியுள்ளார்.

ஹஜ் கோட்டாவின் குறைப்பு இலங்கைக்கு மாத்திரமல்லாது அனைத்து நாடுகளுக்குமான கோட்டாக்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ஹஜ்கோட்டா குறைப்பு தொடர்பாக முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஸமீலை ‘விடிவெள்ளி’ தொடர்புகொண்ட போது அவர் பின்வருமாறு கருத்து வெளியிட்டார். திணைக்களம் கோட்டா 2800 என்ற இலக்கை வைத்தே ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தியது. தற்போது கோட்டா குறைப்பினால் திணைக்களம் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றாலும் சவூதி ஹஜ் அமைச்சின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டியுள்ளது.

எனவே, இந்த தர்மசங்கட நிலையில் ஹஜ் முகவர்களும், ஹஜ் விண்ணப்பதாரிகளும் தியாக உணர்வுடன் செயற்பட வேண்டும்.இதனை ஒரு பிரச்சினையாக உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :