ரஷ்யாவில் முதல் முறையாக 2018-ம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடர் நடைபெற உள்ளது.


ஷ்யாவில் முதல் முறையாக 2018-ம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. ஜூன் 8-ம் திகதி தொடங்கி ஒரு மாதம் போட்டிகள் நடைபெறுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள 32 அணிகள் பங்கேற்று விளையாடும் இப்போட்டிக்காக 12மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த ஆர்வமாக உள்ள ரஷ்ய அரசு, அதற்கான நிதியை தாராளமாக வழங்க முன்வந்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு 20 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் கோடி) செலவு செய்ய உள்ளதாக ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் இன்று தெரிவித்தார்.

இது 2010ம் ஆண்டு புதின் பிரதமராக இருந்தபோது செலவு செய்ய முன்வந்த தொகையைவிட (10 பில்லியன் டாலர்) இரு மடங்காகும். இதுதொடர்பாக மெத்வதேவ் தனது மந்திரி சபையில் இன்று பேசுகையில்,உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக வரும் பட்ஜெட்டில் 13 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும் என்றார். மீதி தொகை எந்த வழியில் விடுவிக்கப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.

இதேபோல், 2014-ம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக அரசு 51 பில்லியன் டாலர் செலவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :