சப்ரகமுவ மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 12 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
இதில் இரத்தினபுரி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, பலாங்கொட உதவி பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 12 பேர் காயமடைந்ததோடு அதில் 10 பேர் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரை நோக்கி மாணவர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பலாங்கொட - பம்பகின்ன பகுதியில் பதுளை - கொழும்பு வீதியை முழுமையாக மறிந்து 1000 - 1500 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் நோயாளர்களை ஏற்றிச் சென்ற மூன்று அம்பியூலன்ஸ் வண்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து நெரிசலால் அசௌகரியங்களை எதிர்நோக்கியதால் மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டு பிரயோகித்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.ஆர்ப்பாட்டத்தின் போது மோதலில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment