ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன மரணமடைதுள்ளார்.

னித உரிமைகள் செயல் பாட்டாளரும், முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன மரணமடைந்துள்ளார். இவர் சிங்கப்பூரில் தனது இதய நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிங்கப்பூரில் மரணமடைதுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன முன்னாள் அமைச்சராகவும் மருத்துவத் துறையில் பல்வேறு கற்கைகளை முடித்தவருமான இவர் இலங்கையில் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் துணிவு மிக்க சிறந்த மனிதராக மதிக்கப்படுகிறார்.

இவர் கொழும்பு பல்கலை கழகத்தின் வைத்திய துறையில் பட்டம் பெற்ற டாக்டர் , ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு துறை சார் முதுநிலை பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் வைத்திய விஞ்ஞானம் அங்கீகரித்துள்ள இஸ்லாத்தின் உண்மைகள் (Truth of Islam which is being proved medically) என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :