2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அஜித் மானப்பெரும, டாக்டர் ஜயலத் ஜயவர்தனவுக்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனின் இடத்திற்கு அஜித் மானப்பெருமவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிங்கப்பூரில் உயிரிழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் பூதவுடல் இன்று (30) மாலை இலங்கைக்கு எடுத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சுகயீனமுற்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று (30) காலை காலமானார்.
இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஜூன் மூன்றாம் திகதி ஜா-எல வெலிகம்பிட்டியவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.