தன்னை விடுதலை செய்ய எவரிடமும் தான் மன்னிப்பு கோரவில்லை -அஸாத் சாலி


ன்னை விடுதலை செய்ய எவரிடமும் தான் மன்னிப்பு கோரவில்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி தெரிவித்தார்.



விடுதலை செய்யப்பட்ட நிலையில் நவலோக வைத்தியசாலை கட்டிலில் இருந்தவாறு கருத்து தெரிவித்த அவர் ,

என்னை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நான் ஜனாதிபதி உள்ளிட்ட எவரிடமும் மன்னிப்பு கோரவில்லை.

நான் எந்தக்குற்றமும் செய்யாத நிலையில் எதற்காக மன்னிப்புக் கோர வேண்டும். எனது விடுதலையின் பிரதான பங்கு ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் உள்ளது.

ஊடகங்கள் பொதுமக்களுடன் இணைந்து சர்வதேச அமைப்புக்ள் மற்றும் பிற அமைப்புக்கள் கொடுத்த அழுத்தங்களே என்னை விடுதலை செய்துள்ளது.

எனது விடுதலை தொடர்பில் நான் கொடுத்த சத்தியக் கடதாசியில் மன்னிப்புக் கோரும் எவ்விதமான வாசகங்களும் இல்லை. அதில் இரண்டு வரிகள் மட்டுமே உள்ளது.

‘‘நான் எவ்விதமான தீவிரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்படவோ அல்லது அதனை தூண்டவோ இல்லை. அத்துடன் அரசுக்கெதிராகவும் ஒரு போதும் செயற்படவுமில்லை’’ என மட்டுமே அச்சத்திய கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :