தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளன அம்பாறை மாவட்ட நிர்வாகிகள்.


(சுலைமான் றாபி )

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை  மாவட்ட : மாவட்ட சம்மேளன புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான விஷேட கூட்டம்  11.05.2013 சனிக்கிழமை அம்பாறை கச்சேரியின் கேட்போர் கூடத்தில் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர். திரு கே.எம் திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு  பிரதம அதிதியாக உணவு மற்றும் போசாக்கு   சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரட்ன, கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலேப்பே, பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேசேகர, புதிதாக இளைஞர்  பாராளுமன்றதிற்கு தெரிவான இளைஞர்  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை  மாவட்ட  இளைஞர் சேவை அதிகாரிகள் பிரதேச சம்மேளன உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை  மாவட்ட சம்மேளன புதிய நிர்வாகிகள் விபரம்.

தலைவர் - யு எல் எம் சர்ஜூன் - அட்டாளைச்சேனை
உப தலைவர் (I) - ஏ ஜி அன்வர் - சாய்ந்தமருது
உப தலைவர் (II) - எம் என் எம் நுசைர் - இறக்காமம்
செயலாளர் (பதவி வழியாக) - மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி டபிள்யு ஏ ஜி சாகரிகா தமயந்தி
உப செயலாளர் (I) - எம் ஷிம்றி அஹமட்  - நிந்தவூர்
உப செயலாளர் (II) - எம் யு எம் அசார்டீன் - சம்மாந்துறை
பொருளாளர் - ஐ ஜெயந்தன் - அக்கரைப்பற்று
அமைப்பாளர் - எம் வை எம் இம்ரான் - கல்முனை
உதவி அமைப்பாளர் - எஸ் எம் ஜெசீல் - அட்டாளைச்சேனை

இதே வேளை அம்பாறை மாவட்டத்திலிருந்து இளைஞர்  பாராளுமன்றதிற்கு தெரிவானோர் விபரம்

1. எப்.ஜே.முகம்மட் (சம்மாந்துறை),
2.யூ.எல்.அஸ்பாஹான் (இறக்காமம்),
3. யூ.எல்.எம்.சபீர் (அட்டாளைச்சேனை)
4.எஸ்.எல்.எம். ஷாபி (நிந்தவூர்)
5.கே.ரசிதரன் (கல்முனை தமிழ் பிரிவு)
6.ஏ.எல்எம்.றிஸான் (சாய்ந்தமருது)
7.ஏ.பிரேமானந் (காரைதீவு)
8.ஏ.எம்.எம்.முஜீப் (கல்முனை முஸ்லீம் பிரிவு)
9. ரீ.சுதன் (நாவிதன்வெளி),
10.எம்.ஐ.அன்வர் சஜாத் (அக்கரைப்பற்று)
11.ரீ.ஜெயந்தன் (ஆலையடிவேம்பு)
12.ரீ.தவநேசன் (திருக்கோவில்)
13.ஐ.எல்.ஹில்முதீன் (பொத்துவில்)

இதேவேளை இந்நிகழ்வினை  இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம் அசிம் இரண்டு மொழிகளிலும் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :