புத்தளம் பொலீஸ் பிரிவுக்குற்பட்ட பாலாவி நாகவில்லு பகுதியில் இன்று 13.05.2013 திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி மீள்குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஐ.ரம்ஸீன் (வயது 32) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நேக்கிச் சென்ற வான் ஒன்று இவர் மீது மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள புத்தளம் பொலிஸார் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment