(எம்.பைஷல் இஸ்மாயில்)
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது.
கலாசாலை அதிபர் எம்.எஸ்.அப்துல் ஹபீழ் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இக்பால், கஸ்ஸாலி ஆகிய இல்லங்கள் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தன. அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பான முறையில் வருடாந்தம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த காலங்களை விட இம்முறை இரண்டு இல்லங்களே போட்டிகளில் பங்கு பற்றியது. குறைந்தளவான பயிற்சி ஆசிரியர்களே தற்போது பயிற்சி பெற்று வருவதால் மூன்றாவது இல்லமான றூமி இல்லம் பங்கு கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
இருந்தாலும் பயிற்சி ஆசிரியர்கள் மிகச் சிறப்பான முறையில் இவ்விளையாட்டுப் போட்டியை நடத்தி முடித்தமை பாராட்டப்பட வேண்டியதாகும்.
போட்டி முடிவுகளின்படி இக்பால் இல்லம் 181 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. கஸ்ஸாலி இல்லம் 174 புள்ளிகளைப் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட எஸ்.எல்.எம்.சலீம் சம்பியனான இக்பால் இல்லத்திற்குரிய கிண்ணத்தை வழங்கி வைத்தார். அதேபோன்று இரண்டாமிடம் பெற்ற கஸ்ஸாலி அணிக்குரிய கிண்ணத்தை கல்லூரி முதல்வர் வழங்கி வைத்தார்.
மேலும் மெய்வல்லுநர் போட்டிகள், குழுநிலைப் போட்டிகள் என்பனவற்றில் சம்பியனான இல்லங்களுக்கும் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு வினோத உடைப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
+-+Copy.jpg)
+-+Copy.jpg)
+-+Copy.jpg)
+(1)+-+Copy.jpg)
0 comments :
Post a Comment