.jpg)
பாராளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு அறுதிப் பெறும்பான்மையை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களே என்பதை பொதுபல சேனாவும், சிங்கள ராவய அமைப்புக்களும் மறந்து விடக் கூடாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் Nமு றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெறும்பான்மை பலத்தை பெற்றுக் கொடுத்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே அவ்வாறு முஸ்லிம்கள் வழங்கிய அதிகாரப்பலத்தை கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பாராளமன்றத்தில் தீர்மானம் எடுக்குமாறு பொதுபல சேனாவும், சிங்கள ராவயவும் கூறுவது எமது கைவிரலை எடுத்து எமது கண்களை குத்துவதற்கு சமமானதாகும்.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் தீட்டு உயீரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் இந்திர ரத்தின தேரரின் கோரிக்கைக்கு கூட்டாக பொதுபல சேனாவும், சிங்கள ராவய அமைப்புக்களும் விடுத்துள்ள பிரேரணை அறிக்கையில் பௌத்த மதத்திற்கு அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் பாராளமன்றத்தில் அவசரமாக மதமாற்றம், இறைச்சிக்காக மாடு வெட்டுதல்,மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிரான பிரேரணையை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் பௌத்தர்களின் உரிமையை பாதுகாக்க முடியாத அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெறும்பான்மை எதற்கு எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இன்று பொதுபல சேனாவும், சிங்கள ராவய அமைப்புக்களும் ஏன் ஜதிக ஹெல உறுமய போன்ற பௌத்த கடும் போக்காளர்களும் மார்பு தட்டிக்கொள்ளும் மூன்றில் இரண்டு பெறும்பான்மையை அரசுக்கு இன்று வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு முஸ்லிம்களால் வழங்கப்பட்டுள்ள மூன்றில் இரண்டு பெறும்பான்மையை கொண்டு இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமூலத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றக் கோருவது வேடிக்கையானது.
இன்று பலமதங்களை கொண்ட இந்த நாட்டில் பல கட்சிகளும் பல வௌ;வேறுமதத்தவர்களும் அங்கம் வகிக்கும் பாராளமன்றத்தின் மூன்றில் இரண்டு பொறும்பான்மையை காட்டி இந்த நாடு பௌத்த நாடு என்று ஏனைய மதத்தவர்களை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்திப்பது பௌத்த கடும்போக்கு வாதத்தின் உச்சக்கட்ட நடவடிக்கையாகும்.
இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடைசெய்யுமாறும் அதனால் பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த நாட்டில் வாழும் ஒரு சமூகம் தனது உணவிற்காக மாத்திரமன்றி தனது மர்க்க கடமையை நிறைவேற்றுவதற்காகவும் மாடுகளை அறுப்பதுண்டு அந்த உரிமையையும் பௌத்த தீவிரவாத்தின் மூலம் பலவந்தமாக தட்டிப்பறிப்பதற்கு முற்படுகின்றார்கள் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதனால் பௌத்த மதத்திற்கு எவ்வகையிலும்; அச்சுறுத்தல்; ஏற்படவில்லை. இதனை நிதான போக்குடைய பௌத்தர்கள் நன்கு அறிவார்கள்.
மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது மிருகவதை என்றால் இறைச்சிக்காக ஆடு, பண்றி, கோழிகளை வெட்டுவது மிருகவதையாகாதா? அவைகள் உயீரினங்கள் இல்லையா? மாடுகளை தவிர ஏனைய மிருங்களை இறைச்சிக்காக வெட்டுவதை பௌத்த மதம் அங்கிகரித்துள்ளதா? குறித்த பௌத்த தீவிரவாதிகளின் நேர்க்கம் மிருகவதையை தடுத்து நிறுத்துவதா? அல்லது முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு வெட்டுவதை தடுத்து நிறுத்துவதா? எறும்பைக் கூட கொள்வது பாவம் என்று புத்த பெருமான் கூறினார் அவ்வாரான பௌத்த மதத்தை போதிக்கும் கடும்போக்கு காவியுடையாளர்கள் இந்த நாட்டில் எந்தவொரு உயிரினத்தையும் பௌத்தர்கள் கொன்று உன்னக் கூடாது என உபதேசிப்பதுடன் அதன்படி பௌத்தர்களை வழிநடத்தவும் வேண்டும் அதனை விடுத்து இன்னுமொரு இனத்தின் உரிமையை தட்டிப்பறிப்பதற்கு பௌத்த மதத்தையும் பௌத்த மக்களை தவறாக வழி நடத்தக் கூடாது.
மதமாற்றுச் சட்டத்தை உடன் தடுத்து நிறுத்த பாராளமன்றத்தில் சட்டம் கொண்டு வரணே;டும் எனவும் அடிப்படைவாத முஸ்லிம்களால் பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி பாமர பௌத்த மக்களை பிழையான வழியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு ஏவிவிட்டு ஒற்றுமையாக வாழ்ந்த இரண்டு சமூகங்களை பிளவுபடுத்தி அமைதியை சீர்குளைக்க இந்த பௌத்த கடும் போக்கு காவிவுடைக்கார்கள் முழுமையாக முற்படுகின்றனர். எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment