அமைச்சர் மேர்வின் சில்வா இன்று அநுராதபுரம் மேல் நீதிமன்றில் ஆஜரானார்.


லங்கையின் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று செவ்வாய்க்கிழமை அநுராதபுரம் மேல் நீதிமன்றில் ஆஜரானார்.

1999ம் ஆண்டு எப்பாவல தேர்தல் பிரசார கூட்டத்தின் மீது குண்டு வீசிய சம்பவம் தொடர்பில் சாட்சியளிப்பதற்கே அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அந்த காலப்பகுதியில் அமைச்சர் மேர்வின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்தார்.

இந்த வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் சாட்சியளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக எப்பாவலயைச் சேர்ந்த வசந்த என்பருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டது.
அந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்றுபேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :