இலங்கையில் கடும் மழையால் இதுவரையில் 7 பேர் பலி 1139 இடம்பெயர்வு.

லங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் யானதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் நுவரெலியா மாவட்ட பெயார்வெல் மற்றும் டிக்ஓயா பகுதிகளில் நான்கு பேர் பலியாகினர்.

அத்துடன் நாகசேனை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களில் 3 பேர் பலியானதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் இதுவரையில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1139 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலை - நெருக்கடிக்குள் மீனவர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிப்படைந்திருந்தது.

ஏற்பட்ட காலநிலமை மாற்றத்தினால் வாகரை, கல்குடா, களுவன்கேணி, புன்னக்குடா, சவுக்கடி, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, போன்ற கரையோரப் பிரதேசங்களில் கடல் கொந்தளித்து காணப்படுகிறது.

மரங்கள் முறிந்தும், குடிசை வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ள கரைவலைகள் கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மீன்பிடி படகு, இயந்திரம், கரைவலை போன்றவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை உடனடியாக தெரிவிக்க முடியாமல் உள்ளதாகவும் சரியான சேத விபரங்களை பெறும் பொருட்டு பிரதேச கள உத்தியோகத்தர்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை திரட்டும் படி கேட்டுள்ளதாக மாவட்ட கடல்றொழில் திணைக்கள அதிகாரி எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்தார்.

இதேவேளை வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து கடலுக்கு சென்ற 400 ஆழ்கடல் படகுகளில் 25 படகுகள் மாத்திரம் இது வரைக்கும் சொந்த இடம் வந்து சேரவில்லையென்றும், இது பற்றிய தகவலை பெறுவதற்கான நடவடிக்கையில் தாம் கடல்றொழில் அமைச்சின் உதவியை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேத்தாழையைச் சேர்ந்த பே.தினேஸ் என்பருக்கு சொந்தமான 1886 இலக்கமுடைய படகு கடலில் இருந்து கரைக்கு திரும்பும் வழியில் திங்கட்கிழமை காலை கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக படகு கல் பாறையில் மோதி சேதமடைந்துள்ளதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் தெய்வாதினமாக உயிர் தப்பி கரையை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மாங்கேணி, மாவடி ஓடை, பணிச்சங்கேணி போன்ற இடங்களில் மீனவர்களின் குடிசை வீடுகள் மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடல்றொழில் அமைச்சு அறிவித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :