இளைஞர்களின் நலனுக்காகவும்,அவர்களின் தேவைக்காவும் குரல் கொடுப்பேன்-றிஸான்

( எஸ்.ஸஜான்)
மது பிரதேச இளைஞர்களின் நலனுக்காகவும், கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு
போன்ற விடயங்களிலும் போதிய கவனமெடுத்து அவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பாக
எனது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்துவேன் என
சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.
றிஸான் தெரிவித்தார்.

இலங்கையின் 2வது இளைஞர் பாராளுமன்றத்திற்கு சாய்ந்தமருது பிரதேச செயலகம்
சார்பாக போட்டியிட்டு 198 வாக்குகள் பெற்று வெற்றியீட்டிய
ஏ.எல்.எம்.றிஸான் தனது செறன்டிப் இளைஞர் கழக அங்கத்தவர்களுடனான
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் இளைஞர்களை ஒருநிலைப்படுத்தும் பொறுப்பு நாட்டின் ஜனாதிபதி
முதற்கொண்டு, சகல பிரஜைகளுக்கும் உள்ளது. அந்த தொடரில்தான் கொடூர யுத்தம்
முடிவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் தலைமை இளைஞர்கள் விடயத்திலும் கூடிய
அக்கறை எடுத்து செயற்படுகின்றது. அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதியின்
சிந்தனைப்பிரகாரம் இளைஞர் யுவதிகளின் பல்வேறு ஆற்றல்களையும்
வெளிக்கொண்டுவந்து, அவர்களை எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும்
வகையில் தொழிற்பாட்டு ரீதியாக முன்னுக்கு கொண்டு வரும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின் சிறந்த சிந்தனையின் வெளிப்பாடே இளைஞர் பாராளுமன்ற முறையாகும்.

இந்த இலக்கை அடைவதற்காகவே இலங்கை இளைஞர் பயிற்சி நிலையங்கள்
நிறுவப்பட்டு அதன் ஊடாக இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வெற்றிகரமாக
செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்பயிற்சி நிலையங்கள் ஊடாக மொழியறிவு,
இதர தொழில்சார் கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகிறது. இதனுாடாக என்போன்ற
இளைஞர் யுவதிகள் பல்வேறு துறைசார் பயிற்சிகளையும் பெற்று எதிர்காலத்தை
சிறப்பாக அமைத்துக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எமது பிரதேச இளைஞர்கள் சார்பாக நன்றிகளை
தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று இளைஞர்களே எல்லாவழிகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான போக்குகள், சிந்தனைகள் இன்னும் தொடரவிடக்கூடாது. இளைஞர்களாகிய
நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு எமக்கெதிரான சவால்களையும்,
தடைகளையும் உடைத்தெறிந்து சிறந்தொரு எதிர்கால இளைஞர் சமூதாயத்தைக்
கட்டியெழுப்பவதற்கு அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையாக
செயல்படுவோம். அத்துடன் பல எதிர்புக்கள், சாவல்களுக்கு மத்தியில் எனது
வெற்றிக்கு துணையாய் நின்ற அணைத்து இளைஞர்களுக்கும், ஊடகவியலாளர்கள்,
உயர் அதிகாரிகள் விசேடமாக கல்முனை பொலிஸ் நிலைபொறுப்பதிகாரி
ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துள்கொள்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :