மட்டக்களப்பு மாநகரத்தின் நுழைவாயிலில் புத்தர் சிலையமைக்க மேற்கொள்ளும் முயற்சியானது தற்போது நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிரந்தர சமாமதானத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாநகரத்தின் நுழைவாயிலில் புத்தர் சிலை ஒன்றினை நிரந்தரமாக அமைப்பதற்கு கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் முயற்சித்த போது அதனை தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி பொது அமைப்புக்களும் பொதுமக்களும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாரம்பரியமாக தமிழ்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் மட்டக்களப்பு நகரத்தின் நழைவாயிலில் திட்டமிட்ட அடிப்படையில் புத்தர் சிலையை அமைத்து தமிழர்களின் உணர்வுகளை உரசிப்பார்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியானது நாட்டில் நீண்ட கொடிய 30 வருட யுத்தத்தின் பின்னர் அமைதியாக வாழ்ந்து வரும் மக்களின் நிரந்தர சமாதானத்தினையும் அமைதியையும் குழப்புவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கையாகும.
இவ்வாரான வேண்டப்படாத செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்கள் காட்டும் எதிர்ப்பானது சிங்கள, தமிழ் மக்களிடையே தற்போது வளர்ந்து வரும் நல்லுரவை சீர்குலைத்து விடுவதோடு தமிழர்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தையே தோற்றுவிக்கும்.
மட்டக்களப்பு மாநகரத்தில் சிங்கள மக்கள் நிரந்தரமாக வசிக்காது தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்ற போதிலும் பௌத்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜயந்திபுரம், மட்டக்களப்பு நகரம் போன்ற பகுதிகளில் காணப்படும் பௌத்த விகாரைகளுக்கு என்றும் எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது.
கடந்த 1957களில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத அல்லது அங்கிகரிக்காத சில விரும்பத்தகாத இவ்வாரான பொறுப்பற்ற செயற்படுகளே தமிழர்களை அகிம்சை போராட்டதிலிருந்து விடுபட வைத்து ஆயுதப் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது அப்போராட்டம் நாட்டில் நலாபுரங்களிலும் பாரிய அழிவை ஏற்படுத்தியதுடன் பல லட்சக்கணக்கான உயீர்களையும் காவுகொண்டது.
எனவே அமைதியாக வாழ்ந்து வரும் மக்களிடையே இவ்வாரன விரும்பத்தகாத செயற்பாடுகளை பலவந்தமாக தினித்து தமிழ் சிங்கள மக்களிடையே வீனான பகைமையை ஏற்படுத்தி அமைதியான முறையில் சமாதானமாக வாழ்ந்து வரும் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment