ஒரு இரவைக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து வீரர்களுக்கு அழகிகளை அனுப்பிய நடிகர்.

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் விண்டூ, வீரர்களுக்கு அழகிகளை அனுப்பிவைத்த விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.

விண்டூ, மறைந்த பிரபல நடிகர் தாராசிங்கின் மகனாவார். இவர் கைதானதையடுத்து, பி.சி.சி.ஐ. தீலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பனும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் விண்டூ. வீரர்களுக்கு பிரபலமான மாடல் அழகிகள் மற்றும் இளம் பெண்களை வழங்கிய தகவல், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த அழகிகளுக்கு ஒரு நாள் இரவுக்கு ரூ.1 இலட்சம் (இந்திய ரூபாய்) வரை விண்டூ கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த காட்சிகளில் நடிகர் விண்டூவுடன் சந்தேகத்துக்குரிய தரகர் பவான் என்பவர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

பெங்களூர் ராயல் சேலஞ்சஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெயிலுக்கு, ரூ.4 இலட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை விண்டூ பரிசாக வழங்கிய தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :