புத்தளம் மாவட்டத்தில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்றக் கட்டிட வேலை-அமைச்சர் ஹக்கீம் பார்வை.


புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டியில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்றக் கட்டிட நிர்மாணமான வேலைகளை நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டார்.

செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் இந்த புதிய நீதிமன்றம் நிர்மாணிக்கப்படும் இடத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம், நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

தற்போது கல்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றம் இப் பிரதேசத்தின் விஹாரையொன்றில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. அங்கு வசதிகள் மிகக் குறைவாக உள்ளதால் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இப் புதிய நீதிமன்றத்தின் நிர்மாணிப் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் எதிர்நோக்கும் இப் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விடும்.

தற்பொழுது நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந் நீதிமன்றத்திற்கு 20 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

இந்த கண்கானிப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாருக் மற்றும் நீதியமைச்சின் பொறியியலாளர், அதிகாரிகள் ஆகியோரும் இணைந்திருந்தனர்.






டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்

ஊடகச் செயலாளர்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :