ஜுனைட் நளீமி
கோறளைப்பற்று தெற்கு (கிரான்) என்ற பெயரில்; புதிய பிரதேச சபையினை வகுத்து உருவாக்குதல்' என்ற தலைப்பிடப்பட்ட மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் சுற்று நிருபம் ஒன்றினை வாசிக்க கிடைத்தது.
பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளாரின் கையொப்பமிடப்பட்ட மேற்படி சுற்று நிருபத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் திரு.கே.தனபால சுந்தரம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் சமூகமட்ட குழுவினரின் ஆலோசணைகளையும் பிரேரணைகளையும் கோரியுள்ளனர்.
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள வழியமைப்பது அரசின் கடப்பாடு என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவை இன்னொரு இனத்தை பாதிப்பபதாகவோ உணர்வுகளை வேண்டுமென்றே தூண்டுவதாகவோ அமைந்துவிடக்கூடாது.

இந்தவகையில் கிரான் பிரதேச சபைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் பாரம்பரிய முஸ்லிம் பூமியை எவ்வித கருத்துக்கோடலுமின்றி கபளீகரம்; செய்யும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது.
மேற்படி அமையவுள்ள கிரான் பிரதேச சபையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பாரம்பரிய நிர்வாக எல்லைக்குட்பட்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்கியதான பகுதிகளையும் உள்வாங்குவதற்கான திறைமறைவு நிகழ்ச்சிகள் இடம்பெருவது ஆரோக்கியமான சூழலாக அமையாது என்பதனை குறித்த தரப்புக்கள் விழங்கி கொள்வது அவசியமாகும்.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயளகத்தின் அதிகார பரப்புக்குள் அமைந்திருந்த பாரம்பரியமாக முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட 5கிராம சேவகர் பிரிவுகளும் கிரான் பிரதேச செயலகம் 2003ம் ஆண்டு அமையப்பெற்ற போது பொதுமக்களின் அபிப்பிராயங்களோ, புத்திஜீவிகளது கருத்துக்களோ பெறப்படாமல் இரவோடிரவாக புலிகளின் ஆலோசனைகளுக்கமைய அப்போதய புலிப்பினாமி அதிகார வர்க்கத்தினால் அமைக்கப்பட்டதன் விளைவுகளாக ஏற்பட்ட இன வன்முறைகளும் அப்பாவி தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இழப்புக்களை ச சந்தித்ததனையும்; எவரும் மறந்துவிட முடியாதது போன்று மீண்டும் அவ்வாரான தொரு நிகழ்வு இடம்பறக்கூடாதென பிரார்த்திக்கின்றனர்.

தற்காளிக இணைப்பு என கூறப்பட்ட குறித்த 5கிராம சேவகர் பிரிவுகளிலும் புலிகளின் இனச்சுத்திகரிப்பினால் முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்போது அதிகாரத்தில் இருந்த அரச அதிகாரிகள் முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தியும் மாவீரர்களதும், புலி ஆதரவாளர்களது குடும்பங்களுக்கும் பங்கீடு செய்து ஆவன கபளீகரமும் செய்ததனை மறுத்தொதுக்கிவிடமுடியாது.
சுமார் 50 ஆண்டுகலுக்கும் மேலாக ஓட்டமாவடி கிராம சபையாக தற்போதய கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசசபை உருவாக்கம் பெற்றதிலிருந்து இன்று வரை அதன் அதிகார பரப்புக்குள் கானப்படும் கல்லிச்சை, பொத்தானை, வாகனேரி, ஜப்பார்திடல், மூக்கர்கல், ஆற்றுச்சேனை, வடமுனை,முருத்தானை, காரையடிப்பட்டி, மனாக்கப்பிட்டி, மினு மினுத்தவெளி, போன்ற முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட சுமார் 13000 ஏக்கர் நிலங்களை முஸ்லிம்கள் சொந்தமாக கொண்ட விவசாய கிராமங்கள் உருவாக இருக்கும் கிரான் தெற்கு பிரதேச சபையுடன் இணைக்கும் முயற்சி எவ்வித நியாயப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டதாகும்.

இப்பிரதேசங்களில் உள்ள சுமார் 20க்கு மேற்பட்ட விவசாய கண்டங்களில் 7தமிழ் சகோதரர்களே வட்டவிதானையாக இருப்பதன் மூலம் இக்கிராமங்கள் எவ்வாறு முஸ்லிம்களுக்கு சொந்தமானதாக உள்ளது என்பதனை கண்டு கொள்ள முடியும்.
கடந்த 2003 முதல் தற்காலிக இணைப்பு என்ற போர்வையில் இணைப்புச்செய்யப்பட்ட இப்பிரதேசங்ககளில் முற்று முழுதாக முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்ட நிலையினிலேயே அரச, அரசார்பற்ற நிருவனங்கள தமது சேவைகளை முன்னெடுத்துள்ளன. மீள்குடியேற்றம், விவாசாய மானியங்கள், உதவி நடவடிக்கைகளில் பல்வேறு பாரபட்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்குடா முஸ்லிம்களின் ஜீவனோபாயமாக காணப்படும் விவாசாயம் முழுவதும் இப்பிரதேசத்திலே தங்கியுள்ளது எனத்தெரிந்தே அதனை முடக்கிவிடுவதற்கான நடவடிக்கையாகவே புலிப்பினாமிகள் இந்நில கபளீகர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எது எவ்வாறு இருந்த போதும் இப்பிரதேசவாழ் தமிழ் முஸ்லிம் சகோதர இனங்கள் ஒன்றில் ஒன்று தங்கிவாழ்வதும், சமாதானமாக வாழ விரும்புவதும் கடந்தகால பயங்கரவாதத்தின் விளைவுகளை அநுபவித்ததே காரணமாகும்.
பயங்கரவாத நடவடிக்கைகள் தோற்கடிக்கப்பட்டபின்னர் தமது அரசியல் அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ள இப்பிரதேசத்தில் காணப்பட்ட தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இக்காணிப்பிரச்சிணைகளையும் பிரதேச சபை உருவாக்கங்களையும் ஒரு துருப்புச்சீட்டாக பயண்படுத்திக்கொண்டே வந்துள்ளனர்.

குறிப்பாக கல்குடா முஸ்லிம் அரசியல் வாழைச்சேனை மத்திக்கான தனியான பிரதேச சபை உருவாக்கம், ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவிலிருந்து எவ்வித பொது அபிப்பிராயங்கள் இன்றி பிரித்தெடுக்கப்பட்ட 5கிராம சேவகர் பிரிவுகளை மையப்ப்டுத்தியே அதிகாரங்களை கைப்பற்றிக்கொள்ள முயற்சி செய்து வந்துள்ளனர். இதே போன்று தமிழ்த்தரப்பும் அரசியல் பகடைக்காயாகவே இதனை பயண்படுத்தி வந்துள்ளனர்.
இத்தகைய பிண்ணனிகளை வைத்து நோக்கும் போது குறித்த பிரதேச சபை எல்லை நிர்னயமஇ; உருவாக்கம் என்பது அவசியமானதே. அதே போன்று இதே காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட வாலைச்சேனை மத்தி பிரதேச செயலகத்திற்கான தனியான பிரதேச சபையினை அமைக்காமல் கிடப்பில் வைத்துவிட்டு கிரானுக்கு மட்டும் இவ்வாரான புதிய சபை உருவாக்கம் பற்றி பேசுவது முஸ்லிம்கள் மீதான அரசியல் துரோகமாக மத்திரமின்றி முஸ்லிம் பிரதேசங்களின் இருப்பு மீதான நெருக்குவாரங்களாகவுமே கருதப்படவேண்டியுள்ளது.
எனவே இப்பிரச்சிணைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்வாங்கியதான இணக்கப்பாட்டுடனேயே இப்பிரதேச சபைக்கான புதிய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படவேண்டும் என கருதுகின்றேன். கடந்தாகலங்களில் ஏற்பட்ட வன்முறைகளும், கடையடைப்புக்களும், இனங்களுக்கிடையிலான சந்தேகப்பார்வைகளும் கூர்மையடைவதற்கான வழிமுறையினை உள்நாட்டலுவல்கள் அமைச்சும், உள்ளூராட்சி ஆணையாளரும் ஏற்படுத்த முனைவது இரு இனங்களுக்கும் செய்யும் வரலாற்று துரோகமேயாகும்.
அதே போன்று இம்மாவட்டத்தில் அரசியல் காலங்களின் போது தமது வாக்கு வேட்டைக்கான களமாக பயன்படுத்திக்கொண்ட இப்பிரதேசம் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சிணை குறித்து முஸ்லிம் பிரதி அமைச்சர்களும், மாகாண சபை உருப்பினர்களும் மௌனித்து இருப்பது இரு சமூகங்களுக்கும் குறிப்பாக கல்குடா முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகமாக அமையும்.

எனவே இது குறித்து தங்களது அரசியல் அதிகாரங்களை இங்காவது பயன்படுத்துவீர்கள் என்ற எதிர்பார்ப்பு முன்வைக்கப்படுகின்றது. அதேவேளை சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல் தரப்புக்களுடனும் இது குறித்து பொதுவான இணக்கப்பாட்டுக்கு வழிமயமைத்துக்கொடுப்பது உங்களது கடமையுமாகும்.

0 comments :
Post a Comment