(எம்.பைஷல் இஸ்மாயில்)
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) ஏற்பாடு செய்த மே தின விழா இன்று காலை 10.30 மணிக்கு அட்டாளைச்சேனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
நுஜா அமைப்பின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் விசேட அதிதியாகக் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், நிந்தவூர் மாவட்ட ஆயூர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் கே.எல்.நக்பர், ஊடகத்துறை அமைச்சரின் முன்னாள் செயலாளரும் டோனா சமூக சேவை அமைப்பின் தலைவருமான நளீம் மாஸ்டர், முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகச் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், தொழிலதிபர் ஏ.எல்.மர்ஜூன், அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ், திட்டமிடல் உத்தியோகத்தர் ஐ.எல்.பஜிறுதீன், மூத்த இலக்கியவாதி கலாபுசணம் பாலமுனை பாறூக் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பமான மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் பேரணியாக அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டறவுச் சங்க கூட்ட மண்டபத்தை சென்றடைந்ததும் மே தினக் கூட்டம் ஆரம்பமானது. தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தினக் கூட்டம் 'ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வோம்' எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் கூடுதலான ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக மட்டத் தலைவர்கள், பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் மூத்த ஊடகவியலாளரும், ஊடகத் தொழிற்சங்கவாதியுமான கலாபூசணம் மீரா எஸ். இஸ்ஸதீனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மீரா எஸ். இஸ்ஸதீனுக்கு பொன்னாடை போர்த்த அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தனர். ஊடகத்துறை அமைச்சரின் முன்னாள் செயலாளரும் டோனா சமூக சேவை அமைப்பின் தலைவருமான நளீம் மாஸ்டரும் மீராவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மே தின சிறப்பு உரையினை அம்பாறை மாவட்ட திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர் ஐ.எல்.பஜூறுதீன் நிகழ்த்தினார். மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் மே தினத்தின் வரலாறு பற்றியும், இன்றைய தொழிலாளர் வர்க்கத்தின் மீதான சுரண்டல்கள் தொடர்பாக மிக ஆக்கபூர்வமான உரையினை ஆற்றினர்.
அத்தோடு ஊடகத்துறையில் சுமார் 40 வருடங்களாக பணியாற்றி கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்த்ததோடு, சமூகத்தின் வளர்ச்சிக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ள மீரா எஸ்.இஸ்ஸதீனின் ஆளுமைகளை அதிதிகள் எல்லோரும் சிலாகித்து மனமகிழ்ந்து பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இலங்கையின் மே தின வரலாற்றில் ஊடக அமைப்பொன்று மே தின நிகழ்வை கொண்டாடியது இதுதான் முதற்தடவையாகும். அந்த வகையில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) ஒரு மைல் கல்லைப் பதித்துள்ளது.
இம் மே தின விழாவுக்குரிய ஏற்பாடுகளில் நுஜா அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், செயலாளர் ஜூல்பிகா செரிப் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பெரும் பங்கு வகித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.









0 comments :
Post a Comment