இன்றைய சமூகத்தில் முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கியுள்ளார்கள் -அன்ஸில்

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ன்றைய முஸ்லிம் சமூகத்தில் பேசப்படும் முக்கிய பிரச்சினையாக முஸ்லிம்களின் கல்வி நிலை உள்ளது. முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கியுள்ளார்கள் அவர்களை கல்வியில் முன்னேற்றினால் தான் சமூகம் வெற்றியடையும் என்ற சிந்தனை நம் எல்லோருக்கும் பரவலாக ஏற்பட்டு அதற்கான முயற்சிகளை செய்து வருகின்றோம். 

அந்த முயற்சிகள் சரியானதா? அல்லது பிழையானதா? என்று கூட பார்க்காமலே இருந்து வருகின்றோம். என அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் கூறினார்.
இந்நிகழ்வு மீனோடைக்கட்டு மஸ்ஜூதுல் ஹூதா குர்ஆன் மத்ரிஸா மாணவர்களின் விடுகை விழா நிகழ்வு மத்ரிஸா மண்டபத்தில் என்.எம்.ஹபீல் மௌலவி தலைமையில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் தவிசாளர் அன்ஸில் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களாகிய நாம் ஏனைய சமூகத்தைப் போலல்லாது இம்மை மறுமை இரண்டையும் வெற்றி கொள்ளவே எமது இலக்கை நிர்ணயிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். உண்மையான வெற்றி என்பது மரணத்தின் பின் கிடைப்பதுதான். இதை அறிந்தும் அறியாதவர்கள் போன்று நாம் நடந்து கொள்கின்றோம்.

அதே நேரம் உலகக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் பிரிக்க முடியாது. இருப்பினும் எமது சமூகத்தில் மார்க்கக் கல்வி வேறு உலகக் கல்வி வேறு என்னும் நிலையே காணப்படுகிறது. இதற்குக் காரணம் நாம் கல்வி கற்கும் சூழலலாகும். எமது பிரதேங்களில் இவ்வாறான நிலைமை இல்லை. 

ஆனால் கொழும்பு, கண்டி, காலி, வேருவளை மற்றும் பல வெளிமாவட்டங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் எமது பிரதேசங்களை விட முற்றிலும் மாறுபட்ட சூழலில் உள்ளதை நாம் எல்லோரும் அறிந்தவர்களாக இருக்கின்றோம்.

நிச்சயமாக முஸ்லிம்கள் கல்வி கற்க வேண்டும். ஆனால் அக்கல்வி இஸ்லாத்தைப் பாதுகாக்க உதவவேண்டுமே தவிர படிப்புக்காக இஸ்லாத்தைத் தியாகம் செய்வதாக அமையக் கூடாது. 

முன்னர் உள்ள காலங்களை விட தற்போதைய காலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் உலக கல்விகலுக்காக நாங்கள் இஸ்லாத்தையே இழந்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக இதன் மூலம் வெற்றி அடைய முடியாது. இதை ஏன் கூறுகின்றேன் என்றால் இன்றைய காலகட்டத்திலுள்ள எல்லா மாணவர்களும் இரவு பகலாக படிப்பு படிப்பு என்று எந்த நேரமும் செல்வதை காணக்கூயதாகவே உள்ளன.

இதனால் எமது பிள்ளைகளுக்கும் குர்ஆன் மத்ரிஸாக்களுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் சென்றுகொண்டிருப்பதையும், உலகக் கல்விக்காக குர்ஆன் மத்ரிஸாக்களுக்கு செல்ல நேரம் காலம் போது என்ற நிலைமையும் தோன்றியுள்ளதுடன் இன்று குர்ஆன் மத்ரிஸாக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ள நிலைமை காணப்படுகின்றன. 

அந்தளவு உலக கல்வியின் நோக்கத்தை முன்வைத்து இன்றை முஸ்லிம் சமூகம் சென்று கொண்டிருப்பது என்பது ஒரு மனவேதனையும் கவலையும் தரக்கூடியதொன்றாக உள்ளது.

இன்று பாடசாலைக் கல்வியை சற்று பார்ப்போமாயின் பாடசாலைகளில் பல வகையான சிந்தனைப் போக்கைக் கொண்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து பல மணி நேரங்களின் பின் வெளியாக்கப்படுகிறார்கள்.

 இதனால் அவர்களின் சிந்தனைப் போக்குகளில் மாற்றம் ஏற்படுகிறது. அத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பல வகையான சிந்தனைப் போக்குகளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு ஆசிரியர் சிறந்த இறையச்சமுடையவராக இருப்பார். அவர் மாணவர்களிடையே ஈமானுக்கான பகீரத முயற்சியை மேற்கொள்வார். அடுத்த ஆசிரியர் நாஸ்த்திகராக இருப்பார். அடுத்தவர் சினிமா ரசிகராகவும் இசைப் பிரியராகவும் இருப்பார். 

அடுத்தவர் ஊழல் வட்டி இலஞ்சம் போன்றவற்றை சர்வசாதாரண விடயமாக எடுத்துக் கொள்வார். அடுத்த ஆசிரியர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்களில் பற்றுடையவராக இருப்பார்.

இவ்வாறாக பல வகைப்பட்ட சிந்தனைகளையுடைய ஆசிரியர்களால் ஒரே மாணவர்கள் கற்பிக்கப்படுவதால் மாணவர்களும் பல வகையான சிந்தனைக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். அத்துடன் பாடசாலைகளில் கொடுக்கப்படும் வீட்டு வேலைகள் காரணமாக தொழுகைக்காகவோ மார்க்கக் கல்வியைக் கற்பதற்காககோ ஏனைய மார்க்கக் கடமைகளுக்காகவோ நேரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
பாடசாலைகளில் காணப்படும் ஆண் பெண் தொடர்பு இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமானது. கலவன் பாடசாலைகளாக இருந்தால் சரியான பருவ வயதில் ஆண்களையும் பெண்களையும் கலந்து வகுப்புகளை அமைத்து விடுகிறார்கள்.

 ஆண் பெண் ஆசிரியர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூட்டப்படுகிறார்கள். ஆசிரியர்களிடமிருந்து சில சலுகைகளுக்காகவும் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காகவும் ஆசிரியரிடம் தமது கற்பைத் தொலைத்த மாணவிகளும் எமது முஸ்லிம் சமூகத்தில் இல்லாமலில்லை.

பாடசாலைகளும் பாடசாலைக் கல்வியும் பாட விதான அமைப்புக்களும் யாரால் எதற்காக உருவாக்கப்பட்டவை என்பது பற்றிய தெளிவில்லாததன் காரணத்தாலேயே அப்பொறிக்குள் விழுந்து நம்மை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். குர்ஆன் மத்ரிஸாக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒரு மௌலவியினால் வழி நடாத்தப்படுகின்றார்கள்.

 அதனால் எம்பிள்ளைகளின் போக்கு பாடசாலைக் கல்வியை விட முற்றிலும் மாறுபட்டவையாக மார்க்க விடயங்களில் அதிக அக்கரை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள். என்று தவிசாளர் அன்ஸில் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பெற்றோர்கள் உள்ளிட்ட பல பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :