ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திற்கு பட்டதாரிகள் நன்றி கூறவேண்டும்.

( எம்.சி. சுபைதீன் )
னாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திற்கு உண்மையில் பட்டதாரிகள்
என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கமே 50 ஆயிரம் பட்டதாரிகளை ஒரேதடவையில் நியமன உள்ளீர்ப்புச் செய்தது என சாய்ந்தமருது
வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நிலைய பணிப்பாளரும், கல்முனை கல்வி வலய
ஆரம்பக்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளருமான மௌலவி இஸட். எம். நதீர்
கூறினார்.

2011 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்
கௌரவிப்பு நிகழ்வு மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் இடம்பெற்றபோது
அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மௌலவி நதீர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது,

இவ்வரசாங்கமே தொடர்ந்தும் நீடிக்குமானால் நிச்சயமாக நியமனம்
வழங்கப்படாதுள்ள பட்டதாரிகளாகிய உங்களுக்கும் நியமனம் கிடைக்கும்.

கல்வி என்பது மனிதனை முழுமனிதனாக மாற்றுவதாகும். பட்டம் பெறுவது வெறுமனே
ஒரு தொழிலை பெற்றுக்கொள்வதற்காக என்ற எண்ணம் எம்மிடத்தில் இருக்கக்
கூடாது. பட்டதாரி பட்டம் பக்க விளைவாக ஒரு தொழிலை தேடித்தரும். ஆனால்
பட்டத்தின் உண்மையான விளைவு நற்பிரஜையாக எம்மை உருவாக்க வேண்டும். இல்லை
என்றால் நாம் பெற்ற கல்வியில் எந்தவித பிரயோசனத்தையும் எங்களால் எமது
சமூகம் பெற்றுக்கொள்ளாது.

பட்டதாரிகளைப் பார்க்கின்றபோது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.
உங்களுடைய உள்ளங்களும் அமைதியுடன் சந்தோசமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
இன்று நாங்கள் படித்த சமூகத்தின் பிரதிநிதிகளாக மாறியிருக்கின்றோம்.
படித்த சமூகத்தினுடைய முதுகெடும்பாக நாம் இருக்க வேண்டும். நமது நடை,
உடை, பாவனை சமூகத்திலுள்ளவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
நமது அன்றாட செயற்பாடுகள் மூலம் எமது சமூகத்தில் ஒரு மாற்றம்
கொண்டுவரப்பட வேண்டும். இல்லையெனில் நாம் பெற்ற கல்வியில் எவ்வித
பிரயோசனத்தையும் பெற்றுக் கொள்ள முடியாது.

முன்னைநாள் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பட்டாரநாயக்க குமாரதுங்க
கடைசியாக இலங்கை பொது நிர்வாக உத்தியோகத்தர்களான பட்டதாரிகளை சந்தித்த
மாநாட்டில் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். “உங்களிலே பலர் உங்களின் சொந்த
மொழியிலே ஒரு வசனத்தை எழுதுவதற்கான ஆற்றலை கொண்டிருக்காதவர்கள்” என்று
குறிப்பிட்டார். இதன் கருத்து உங்களின் மொழியாற்றல் மிகவும் பின்தங்கிய
நிலையில் இருந்து வருகிறது. வாசிப்புப்பழக்கம் இல்லாமல் குறைந்து கொண்டு
வருகிறது. என்பதாகும்.

எங்களுடைய காரியாலயத்தில் கூட பல பட்டதாரிகள் இணைந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் தமது சொந்த மொழியிலே ஒரு கடிதத்தை எழுதுவதற்கு முடியாமல்
மிகவும் கஸ்டப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவற்றுக்கு காரணம் எம்மிடையே
வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டுவருவதாகும். இதனால் நாம்
வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

பட்டதாரிகளான நீங்கள் எதிர்காலத்திலே மிகச்சிறந்தவர்களாக இருக்க
வேண்டும். சமூகப்பணியாளர்களாக நாம் மாறுவதன் மூலம் சிறந்த எதிர்கால
சந்ததிகளை உருவாக்குகின்ற பாரிய பொறுப்பை இறையச்சம் உள்ளவர்களாக இருந்து
நிறைவேற்ற முன்வர வேண்டும். என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :