புதிதாக கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் சட்டம்.

புதிதாக கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டத்திலுள்ள இடைவெளிகளை நிரப்பி உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப வழி செய்வதற்காக புதிய சட்டங்களை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு கொண்டுவரவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விகிதாசார பிரதிநிதித்துவம் கூடிய வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெறல் மற்றும் பழைய முறை ஆகிய இரண்டையும் கலந்து உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் கடந்த வருடம் இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தது.

ஆனால், பழைய முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர் ஒருவர் இறந்துவிட்டால் அல்லது பதவி விலகினால், அதை எவ்வாறு நிரப்புவது என்பது சட்டத்தில் கூறப்படவில்லை. இதனால், தேர்தல் திணைக்களம் அரசியல் கட்சிகளும் பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகின்றன.

இது தொடர்பாக உள்ளூராட்சிமன்ற அமைச்சர் அதாவுல்லா, கடந்த வாரம் சமர்ப்பித்த முன்மொழிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக சட்டமா அதிபர் கூறிய ஆலோசனையை முன்னைய வியாக்கியான நிலையியல் சட்டத்தின்படி நிரப்புமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :