பொது பொது பல சேனா அமைப்பு உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு.

காலி,வங்சாவல பிரதேசத்தில் அமைந்துள்ள மெத் செவன கட்டிடத்திலிருந்து பொது பொது பல சேனா அமைப்பினர் உடனடியாக வெளியேறுமாறு காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல கொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பொது பல சேனா அமைப்பினருக்கான இந்த உத்தரவை காலி மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான் குநேந்திர முனசிங்க இன்று பிறப்பித்தார்.

படகொட கமகே அசங்க என்பவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின் போதே நீதிபதியினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர், விஜித தேரர்,விதாரந்தெனிய நந்த தேரர் ஆகியோருடன் குறித்த கட்டிடத்தை பொது பல சேனாவுக்கு வழங்கியதாக கூறப்படும் லிட்டில் ஸ்மைல் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஆகியோர் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் போது வழக்கினை விசாரணை செய்யத நீதிபதி பொது பல சேனா அமைப்பினர் மெத் செவன கட்டிடத்திலிருந்து வெளியேற வேண்டும் என கட்டளை பிறப்பித்து தீர்பளித்தார்.

கடந்த மார்ச் மாதம் குறித்த கட்டிடம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் திறக்கப்பட்டதுடன் பொது பல சேனாவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. பொது பல சேனாவின் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் குறித்த கட்டிடத்தில் இடம்பெறுமென அப்போது பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிராம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கட்டிடம் தொடர்பில் தொடரப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அங்கிருந்து உடனடியாக பொது பல சேனா அமைப்பு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :