11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த திருமாகாத 36 வயதுப்பெண் கைது.


சிறுவனொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கூறப்படும் திருமணமாகாத 36 வயது பெண்ணொருவரையும் 74 வயது நபரொருவரையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விஷேட பொலிஸ் குழுவினர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 11 வயது சிறுவன் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றான்.

பாடசாலையில் காவலாளியான 74 வயது நபரே சிறுவனை ஏமாற்றி அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெற்றோர் இது குறித்து பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது முறைப்பாட்டை ஏற்க பாதுக்க பொலிஸார் மறுத்ததால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து விஷேட பொலிஸ் குழுவினர் 74 வயது பாடசாலை காவலாளியைக் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் அயலிலுள்ள 36 வயது பெண்ணொருவரும் இச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியது தெரிய வந்ததை அடுத்து அப் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பெண் சிறுவனை ஏமாற்றி தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :