சிறைச்சாலை உத்தியோகத்தரை போத்தலால் தாக்கிவிட்டு கைதி தப்பியோட்டம்.


சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பின் கீழ் மொனராகலை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வந்த கைதியொருவர் தப்பியோடியுள்ளார்.

பாதுகாப்புக் கடமையிலிருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை இன்று அதிகாலை 5 மணியளவில் போத்தல் ஒன்றினால் தாக்கிவிட்டு கைதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனால் சிறைச்சாலை உத்தியோகத்தர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மார்ச் மாதம் 26ஆம் திகதி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதியொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :