சவூதியில் நிர்கதியானவர்கள் நாளாம்தம் 25பேர் இலங்கைக்கு அனுப்பப்படுவர்.


வூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகி ஜித்தா காந்ஹார் பாலமருகில் தங்கியுள்ள 1200 இலங்கைப் பணியாளர்களை நாளாந்தம் 25 பேர் வீதம் இலங்கைக்கு திருப்பியனுப்ப அந்நாட்டு  அரசு தீர்மானித்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜித்தாவில் உள்ள இலங்கை கன்சியூலர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் சவூதி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியிலேயே  இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்பும் வரை தற்போது அவர்கள் பணியாற்றும் இடங்களில் பணியாற்றவும் சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜித்தாவில் உள்ள பாலத்திற்கு அருகில் தங்கியுள்ள தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள போதிலும் தம்மை நாட்டிற்கு அழைத்துவர எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கைப் பணியாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே அவர்களை சிறு சிறு குழுவினராக நாட்டுக்கு அழைத்துவரும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :