உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு அக்கரைப்பற்று ஹனிபா கண்டனம்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)
 யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகத்தையும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள்
மீதும் மிக மோசமாக நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அக்கரைப்பற்று மக்கள் பொதுப்பணிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.ஹனிபா வன்மையாக கன்டித்து தனது கன்டனத்தை தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொதுப் பணிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டம் இன்று (15) அக்கரைப்பற்றில் நடைபெற்றபோது அவர் இந்த கன்டனை அறிக்கை சமர்ப்பித்தபோதே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அதன் தலைவர் ஏ.எம்.ஹனிபா மேலம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

யாழ். கஸ்தூரியார் வீதியில் அமையப்பெற்ற உதயன் பத்திரிகை அலுவலகத்தையும் வட பிராந்திய மக்களின் குரலாகச் செயற்பட்டு வரும் அந்த உதயன் பத்திரிகையின் மீதும் அங்கு கடமை புரியும் ஊழிர்கள் மீதும் கடந்த 2013.04.13 ஆம் திகதி அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே நான் கருதுகின்றேன்.

இவ்வாறு ஊடகங்களை குறி வைத்து தாக்குதலை மேற்கொள்ளும் தீய சக்தியினரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் கொண்டுவர ஒரு விஷேட பொலிஸ் குழுவினரை நியமித்து இச்சம்பம் போன்று இனிமேலும் இடம்பெறாதவாறு இருக்க அரசாங்கம் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

வட மாகாணத்தில் வாழுகின்ற மக்களின் மனதை கவர்ந்த பத்திரிகை என்றால் அது உதயன் பத்திரிகை என்றுதான் சொல்ல வேண்டும். இதனை ஏன் கூறிகின்றேன் என்றால் மிக அண்மையில் நான் யாழ் நகர் சென்றிருந்தேன். அங்கு சென்ற எனக்கு இரண்டு நாட்கள் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் எங்கு சென்றாலும் எனது முதல் வேலை பத்திரிகைக் கடை எங்கே உள்ளது என்பதை அறிந்து கொள்வது.

இந்நிலைமையில் யாழ் மறுநாள் காலையில் பத்திரிகை கடைக்குச் சென்று ஒரு சுடர் ஒளி பத்திரிகை தாருங்கள் என கேட்ட எனக்கு கடையின் உரிமையாளர் சுடர் ஒளி பத்திரிகை இங்கு இல்லை உதயன் பத்திரிகையை பாருங்கள் என்று தந்தார். நான் எந்தப் பத்திரிகையை படித்தாலும் அது சுடர் ஒளி பத்திரிகைக்கு ஈடாகாது. சுடர் ஒளி பத்திரிகையில் எந்தளவு உன்மைத்தன்மை உள்ளதோ அதேபோல் தான் யாழ் நகரில் மட்டுமல்ல வட மாகாணம் முழுவதும் கூடுதலாக விற்பனையாகி வரும் ஒரேயொரு பத்திரிகை அது உதயன் பத்திரிகை என்றுதான் சொல்லவேண்டும்.

அந்தளவில் ஒரு உன்மைத்தன்மையான வெளிப்படைத் தன்மையான செய்திகளை நாளாந்தம் மக்களுக்கு வழங்கிவரும் ஒரு பத்திரிகை என்றால் அது உதயன் பத்திரிகையே என்றுதான் சொல்லவேண்டும்.

எமது நாட்டிலுள்ள செய்திகளை உடனுக்குடன் வட மாகாண மக்களுக்கு உண்மைச் செய்திகளை மிக வெளிப்படையாக எடுத்துச் செல்லும் உதயன் பத்திரிகையின் அச்சு இயந்திரங்களையும், அங்கு கடமையிலுள்ள ஊழியர்களையும் மிக மிருகத்தனமான முறையில் தாக்குதலை நடாத்தியுள்ள செய்தியை கேட்ட எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அப்பத்திரிகையை இரு நாட்கள் படித்த எனக்கு இவ்வாறு இருந்தால் அங்கு வசிக்கும் மக்களுக்கு எப்படியிருக்கும் என்று என்னால் கூறவே முடியாது.

உதயன் பத்தரிகை மீது தொடராக மேற்கொள்ளப்படும் இத்தாக்குதலை அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஊடகங்களை தாக்கி வரும் செயல் இது 32 ஆவது தாக்குதல் என நான் கருதுகின்றேன். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களுக்கான தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது அரசின் கடமையாகும்.

எமது தாய் நாட்டுக்கு சர்வதேசத்தில் மேலும் மேலும் அபகீர்த்தியை உண்டாக்கும் ஒரு செயலாகவே நாம் இதனை நோக்க முடியும். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு இச்செயல் நிறுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ள இந்நிலையில் அந்த மாகாண மக்களின் கருத்துகளை உண்மைக்குன்மையாக செய்திகளை மக்களுக்கு அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பினை உதயன் பத்திரிகையினாலேயே வழங்க முடியும். இவ்வாறானதொரு நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஒரு திட்டமிட்ட செயல் என்றே கருத முடியும்.

ஊடக சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் மக்கள் தகவல் அறியும் உரிமைகளை இல்லாமல் செய்யும் எந்தச் செயற்பாடும்  ஜனநாயகத்தின் மீதான சாவு சாவுமணியாகவே அமையும். என்று அக்கரைப்பற்று மக்கள் பொதுப்பணிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.ஹனிபா வன்மையாக கன்டித்து தனது கன்டன அறிக்கையை சமர்ப்பித்துக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :