(பாலமுனை றனீஸ் ஆதம்)
பாலமுனை கலாசார அபிவிருத்தி மையம் மகிழ்ச்சியுடன் நடாத்தும் மின்ஹாஜ் மகா வித்தியாலய கலைப்பிரிவு மாணவன் எஸ்.எச்.ஏ.முபீத் (பாலமுனை முபீத்) எழுதிய 'கொலுசுச் சத்தம்' கவிதை நூல் வெளியீட்டு விழா 2013.04.14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணிக்கு கலாபூஷனம் ஆசுகவி அன்புடீன் தலைமையில் பாலமுனை இப்னுஸீனா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடை பெற்றது.
இவ்வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பு நிர்மானமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் கௌரவ எம்.எஸ்.உதுமாலெவ்வை (ஆPஊ) அவர்களும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆரிப் சம்சுதீன் (MPC), அட்டாளைச்சேனைப் பிரதேச சபை தவிசாளர் கௌரவ எம்.ஏ.அன்சில் அவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment