விக்கிபீடியா
பாலமுனை பாறூக் (Palamunai Farook) சுமார் நாற்பது வருடங்களாக கவிதை எழுதிவரும் கவிஞர். கலாபூசணம், சாமஸ்ரீ சிறாஜுல் புனூஸ், கவிப்புனல், கவித்தாரகை, கவிஞர் திலகம் போன்ற விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர். 2002ல் இலங்கையில் இடம்பெற்ற உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய விழாவில் சிரேஷ்ட கவிஞருக்கான விருது இவருக்கு கிடைத்தது. மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற இலக்கிய மாநாடுகளில் பங்கேற்றவர். காயல்பட்டின மாநாட்டில் கவிதை பாடிப் பேசப்பட்டவர்.வெளியீடுகளுக்கான விருதுகள் சில
கொந்தளிப்பு எனும் இவருடைய குறுங்காவியம் 2010ல் வெளிவந்தது. இது 2010ல் வெளிவந்த சிறந்த காவிய நூல் என இலங்கை அரச சாகித்திய சான்றிதழைப் பெற்றுக் கொண்டது. இவரால் வெளியிடப்பட்ட தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம், இலங்கை அரச சாகித்திய விருது (2012), கொடகே தேசிய சாகித்திய விருது, 2012ன் “உருத்திரமூர்த்தி மகாகவி விருது”, இலங்கை இலக்கிய பேரவை (யாழ்பாணம் ) சிறப்புச்சான்று ஆகியவற்றைப் பெற்றது.
[தொகு]வெளியிட்ட நூல்கள்
பதம் (கவிதை தெகுப்பு), 1987
சந்தனப் பொய்கை (கவிதை தெகுப்பு), 2009
கொந்தளிப்பு (குறுங்காவியம்), 2010
தோட்டுப்பாய் மூத்தம்மா (குறுங்காவியம்), 2011
[தொகு]தொகுப்பாசிரியராக வெளியிட்ட நூல்
எழுவான் கதிர்கள் (கிழக்கு மாகாண கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு), இலங்கை இஸ்லாமிய நூல் வெளியீட்டு பணியகம் (சாய்ந்தமருது), தொகுப்பு: கவிச்சுடர் அன்புமுகையடீன், கவிஞர் பாலமுனை பாறூக்
[தொகு]மக்கள் பணியும் எழுத்தாளர் சங்க பங்களிப்பும்
சமூக சேவையாளரான இவர், அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்டத் தலைவராகவும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. யின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் ஆகவும், பாலமுனை கிராமோதய சபையின் தலைவராகவும், பாலமுனை ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவராகவும் சேவையாற்றியவர். பாலமுனை பூஞ்சோலை எழுத்தாளர் மன்றம், தென் கிழக்கு கலாசார பேரவை என்பவற்றின் செயலாளராகவும் கடமை புரிபவர். இலங்கை இசுலாமிய நூல் வெளியீட்டு பணியக பணிப்பாளர் சபை உறுப்பினர். கல்முனை புதிய பறவைகள் கவிதா மண்டலத்தின் ஸ்தாபக உறுப்பினர்.
மேலும் இவர் அகில இலங்கை சமாதான நீதிபதியாகவும், அட்டாளைச் சேனை மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் மக்கள் பணிபுரிபவர். இலங்கை வங்கியில் முகாமையாளர் தரத்தில் கடமையாற்றுகிறார்.

0 comments :
Post a Comment