யாருக்கும் பயந்து நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் தாரைவாக்க இடமளிக்கப்பட மாட்டாது-அமைச்சர் பஷில் ராஜபக்ஷ

சர்வதேச சமூகம் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் தாரைவாக்க இடமளிக்கப்பட மாட்டாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் டொலர்களை விடவும், நாட்டின் சுயாதீனத்தன்மையை மதிக்கின்றது. வெளிநாட்டு உதவிகள் மற்றும் உடன்படிக்கைகளுக்காக அரசாங்கத்தின் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. அரசாங்கத்தின் குறைபாடுகள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொண்டு வெற்றிகரமாக அபிவிருத்திப்பாதையில் நகரவே விரும்புகின்றோம்.
மக்கள் கட்சி பேதமின்றி அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றமையினால் உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை வெற்றிகொள்ள முடிகின்றது. நாட்டின் அனைத்து இன மக்களையும் கருத்திற் கொண்டே அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கின்றது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மக்கள் ஆணைக்கு முரணான வகையில் அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.news.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :